உபரி நிதியை எடுத்தால் ரிசர்வ் வங்கியின் தரம் குறைந்து விடும் – முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன்

ரிசர்வ் வங்கியில் உள்ள உபரி நிதியை எடுத்தால் நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கும் என ஆர்.பி.ஐ.யின் முன்னாள் ஆளுனர் ரகுராம் ராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.

ரிசர்வ வங்கியின் ஆளுநராக இருந்த உர்ஜித் படேல் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். மத்திய அரசு, ரிசர்வ் வங்கியில் உள்ள உபரி நிதியில் இருந்து 3 லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாயை கேட்டதாகவும் அதற்கு உர்ஜித் படேல் மறுத்ததாகவும் இதன் அடிப்படையில் அவர் ராஜினாமா செய்ததாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவித்தன. இதனிடையே ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சக்தி காந்த தாஸ் நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில் உபரி நிதி குறித்து முன்னாள் ஆளுனர் ரகுராம ராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில் ரிசர்வ் வங்கி தற்போது நிதி நிலை நன்றாக இருக்கும் சான்றை பெற்றிருக்கிறது என்றும் ரிசர்வ் வங்கி தன்னிடமுள்ள நிதியை மத்திய அரசிடம் வழங்கி விட்டால் இந்த தரநிலையை இழந்து விடும் என்று தெரிவித்துள்ளார். இது நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் பாதிக்கும் என ரகுராம் ராஜன் சுட்டிக்காட்டியுள்ளார்

Exit mobile version