யோகி பாபுவின் பெயரை கெடுக்காதீங்க: வீடியோ வெளியிட்ட நடிகை

யோகி பாபுவின் திருமணம் குறித்து ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்த நிலையில், அந்தப் புகைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் நடிகை வீடியோவில் விளக்கம் அளித்துள்ளார்.

2009 ஆம் ஆண்டு முதல் சினிமாவில் நடித்து வரும் யோகி பாபு மான் கராத்தே திரைப்படத்தில் ‘வவ்வால்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டை பெற்றார்.பின்பு வேதாளம், ரெமோ ஆகியதிரைப்படங்களில் தொடர்ந்து நடித்தார்.

பின்பு 2018 ஆம் ஆண்டு வெளியான கோலமாவு கோகிலா திரைப்படத்தில் நயன்தாராவுக்கு ஜோடியாக நடித்து நயன் ரசிகர்களின் மனதையும் கவர்ந்தவர்.

இந்நிலையில் யோகி பாபு திருமண கோலத்தில் இருப்பது போல் ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் சில நாட்களாக வைரலாகி வந்தது.நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் யோகி பாபு ‘எனது கல்யாணம் பற்றி தவறான தகவல்கள் பரவி வருகிறது .அது வெறும் வதந்தியே. எனது கல்யாணம் முடிந்ததும் நானே அனைவருக்கும் முறையாக அறிவிப்பேன் என்று கூறினார்.

 தற்போது அங்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை சபிதா ராய் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் ‘ அந்த புகைப்படத்தில் இருப்பது நான் தான் .அதை பார்த்து சிரிப்பதா, அழுவதா என்று தெரியவில்லை. இது முற்றிலும் வதந்தி.கடந்த 2014ஆம் ஆண்டு கன்னிராசி என்ற படத்தில் அவருடன் இணைந்து நடித்தேன். அப்போது நான் கேட்டுக் கொண்டதால் எடுத்த செல்பி புகைப்படம் தான் அது.

யோகிபாபு எனக்கு நல்ல நடிகராக பிடிக்கும்.மேலும் திரைக்கு வர இருக்கும் காக் டெயில், ராஜவம்சம் ஆகிய படங்களிலும் அவருடன் நடித்திருக்கிறேன்.தயவு செய்து யாரும் போலியான செய்திகளை பரப்பாதீர்கள். அவருடைய பெயரையும், என்னுடைய பெயரையும் கெடுக்காதீர்கள் என்று கூறியுள்ளார்.

 

 

Exit mobile version