காதலியிடம் சொல்லக்கூடாத வார்த்தை – Happy Valentines Day

இன்னைக்கு நேரா போயி உங்க தோழிகிட்ட ஹேப்பி வேலண்டைன்ஸ் டே ன்னு சொன்னா என்ன சொல்லுவாங்க.

போடா பைத்தியகாரா என்றொரு அசட்டுத் திட்டு  அல்லது  ஒன்னுமில்ல, ஏதும் நடக்காது.

ஆனா சொல்லலாமா? தப்பில்லயா?

 

தப்பில்ல. சொல்லப்போனா இத காதலிகிட்ட சொல்றதுதான் தப்பு. காதலை சேத்து வெச்ச ஒருத்தன அநியாயமா கொன்ன நாள்.

அப்போ கரெக்ட் தான. காதலுக்காக செத்த மனுஷன் நினைவா காதலர் தினம் கொண்டாடுறோம். இதுல என்ன தப்பு. ஒரு தப்புமில்ல. தப்பு எல்லாம் இந்த பேரு வெச்சவன் மேலதான்.

”வேலண்டைன் மெமோரியல் டே” னு இதுக்கு பேரு வெச்சிருந்தா, எத்தன பேரு ரோசாப்பூ வாங்கிக்கிட்டு , வேலண்டைனுக்கு அஞ்சலி செலுத்த ரோமுக்கு போயிருப்பீங்க.

குறைஞ்சது, அந்த ஒரு நாளாவது கைய கால அடக்கிக்கிட்டு அந்த மனுஷன நெனைப்பீங்க. நிச்சயம் ஒருத்தர் கூடக் கிடையாது. 

இது வேலண்டைன்ஸ் டே தான். இன் ஃபேக்ட் வேலண்டைன் மெமோரியல் டே – சோ ப்ளீஸ் கீப் காம் காதலர்களே

ஒருவரின் இறந்த தினம் கொண்டாடுவதற்கல்ல. வேலண்டைன் ஒன்றும் நரகாசுரனுமல்ல. 

Exit mobile version