“ஆன்லைன் ரம்மி போன்ற விளையாட்டுகளில் ஈடுபட வேண்டாம்!”

’ஆன்லைன் ரம்மி’ போன்ற பணம் வைத்து விளையாடும் இணையவழி விளையாட்டுகளை அரசு தடை செய்துள்ளதால், அவற்றில் ஈடுபட வேண்டாம் என பொதுமக்களுக்கு தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

பணம் வைத்து விளையாடப்படும் ஆன்லைன் ரம்மி போன்ற இணையவழி விளையாட்டுகள் தடை செய்யப்படும் என முதலமைச்சர் அறிவித்திருந்தார். இதற்காக சூதாட்ட சட்டம், சென்னை நகர காவல்சட்டம், தமிழ்நாடு மாவட்ட காவல் சட்டங்களில் திருத்தங்கள் செய்து ஒரு அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இது 21ஆம் தேதி நாளிட்ட அரசு சிறப்பிதழில் வெளியிடப்பட்டு உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

எனவே இனிவரும் காலங்களில் ‘ஆன்லைன் ரம்மி’ போன்ற இணையவழி விளையாட்டுகளில், பணம் வைத்து விளையாடுபவரும், இவ்விளையாட்டை நடத்துவோரும் அபராதத்திற்கும், சிறைத்தண்டனைக்கும் ஆளாக்கப்படுவர் என தமிழக அரசு எச்சரித்துள்ளது. ((இவ்விளையாட்டின் தாக்கத்தை உணர்ந்து ’ஆன்லைன் ரம்மி’ போன்ற பணம் வைத்து விளையாடப்படும் இணையவழி விளையாட்டுகள் தடை செய்யப்பட்டுள்ளதால், அவற்றில் ஈடுபட வேண்டாம் என பொதுமக்களுக்கு தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.))

 

Exit mobile version