கொரோனா தடுப்பூசி தொடர்பான வதந்திகளை நாட்டு மக்கள் நம்பவேண்டாம் என பிரதமர் நரேந்திரமோடி கேட்டு கொண்டுள்ளார்.
மனதின் குரல் நிகழ்ச்சியின் மூலம் நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, கொரோனா இரண்டாவது அலை நாட்டை உலுக்கி விட்டதாகவும், கொரோனா தொடர்பான தகவல்களை நம்பகத்தன்மை உள்ள இடங்களில் இருந்து மட்டுமே அறிந்து கொள்ள வேண்டும் என நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தினார்.
கொரோனா தடுப்பூசி தொடர்பான வதந்திகளை நாட்டு மக்கள் நம்பவேண்டாம் என கேட்டுக்கொண்ட பிரதமர் மோடி, மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் இலவசமாக தடுப்பூசிகளை அனுப்பி வைப்பதாக குறிப்பிட்டார். மே 1 ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோரும் தடுப்பூசி செலுத்தி கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார். கொரோனாவுக்கு எதிரான போரில் முக்கிய பங்களிப்பை வழங்கும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு இந்நேரத்தில் நன்றி தெரிவித்து கொள்வதாக பிரதமர் கூறினார்.