திமுக அரசின் மின் கட்டண கொள்ளையால், சேலத்தில் குடிசை மாற்று வாரிய வீடுகளுக்கு பலமடங்கு மின் கட்டணம் உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர்.
சேலத்தில் ஜங்சன் பின்புறமுள்ள சேலத்தாம்பட்டி ஏரி அருகே குடிசை மாற்று வாரியத்தின் மூலம் கட்டப்பட்ட 840 அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன.
கடந்த 15 ஆண்டுகளாக வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள் இதில் மாதம் 250 ரூபாய் வாடகைக்கு வசித்து வருகின்றனர்.
கடந்த சில மாதங்களாக இங்குள்ள குடியிருப்புகளுக்கு மின் கட்டணமானது பலமடங்கு அதிகரித்துள்ளதாக இப்பகுதி மக்கள் வேதனையை வெளிப்படுத்தியுள்ளானர்.
கடந்த அதிமுக ஆட்சியில் முதல் 100 யூனிட் பயன்பாட்டிற்கு மின் கட்டணம் இலவசமாக அறிவிக்கபட்டது.
ஆனால், திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் மின்கட்டணமானது பலமடங்கு அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
குடிசை மாற்று வாரிய வீட்டிற்கு வாடகையே 250 ரூபாய்தான் என்ற நிலையில், மின் கட்டணமோ 6 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்படுவதாக குற்றம்சாட்டினார்.