ஜவ்வாதுமலையில் நடைபெற்ற நாய்கள் கண்காட்சி

ஜவ்வாதுமலையில் நடைபெற்ற நாய்கள் கண்காட்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையில் 22ஆம் ஆண்டு கோடை விழா நடைபெற்றது. இதன் நிறைவுநாளில் நடைபெற்ற நாய்கள் கண்காட்சியில் ஜெர்மன் ஷெப்பர்ட், கிரேக் டேன், கோல்டன் ரெட்ரேவர், பெல்ஜியம் செம்பர்ட், டாபர் பேன் வகை நாய்களும், சிப்பிப்பாறை, கோம்பை உள்ளிட்ட தமிழக வகை நாய்களின் அணி வகுப்பு நடைபெற்றது.

இதில் மோப்ப சக்தி, உரிமையாளர்களின் சொல்லுக்கு கட்டுப்படுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் நாய்களுக்கு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன.

Exit mobile version