தாயை இழிவுபடுத்திப் பேசிய திமுகவுக்கு பெண்கள் எவரும் வாக்களிக்க மாட்டார்கள் என்று காரைக்குடி தொகுதி பா.ஜ.க வேட்பாளர் ஹெச்.ராஜா கூறினார்.
காரைக்குடியில் தேர்தல் அலுவலகத்தில் செய்தியாளர்களை ஹெச்.ராஜா சந்தித்தார். அப்போது, பா.ஜ.க – அதிமுக கூட்டணி தமிழகத்தில் பெரும்பான்மையை பெற்று ஆட்சி அமைக்கும் என்றார். திமுகவுக்கு எல்லாப்பிரிவு மக்களையும் காயப்படுத்தும் மனப்போக்கு உள்ளதாக குறிப்பிட்ட அவர், ஸ்டாலின் பெண்மையை மதிப்பவராக இருந்தால், முதலமைச்சரின் தாயார் குறித்து அவதூறாகப் பேசிய ஆ.ராசாவை திமுகவிலிருந்து டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டார்.