தொட்டபெட்டா சாலை சீரமைக்கப்பட்டு வரும் 7ஆம் தேதி சாலை திறப்பு

உதகையின் முக்கிய சுற்றுலா ஸ்தலமான தொட்டபெட்டா சாலை சீரமைக்கப்பட்டு, வரும் 7-ம்தேதி சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

கடல் மட்டத்திலிருந்து சுமார் 2 ஆயிரத்து 660 அடி உயரத்தில் இருக்கும் தொட்டபெட்டா சிகரத்திற்கு, சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாக காணப்படும். இந்த சுற்றுலா ஸ்தலமானது வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ளதால், இச்சாலையில் வாகனங்கள் செல்ல நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும், தொட்டபெட்டா சந்திப்பு முதல், தொட்டபெட்டா வரை பயணிக்கும் சாலையானது குண்டும் குழியுமாக காணப்பட்டது. இதனால் சுற்றுலாபயணிகள் பயணிக்க மிகவும் சிரமம் ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த 3 மாதங்களாக சாலை சீரமைப்பு பணி தீவிரமாக நடைபெற்று, தற்போது நிறைவடைந்துள்ளது. இன்னும் 10 தினங்களில் உதகையில் இரண்டாம் பருவகால சீசன் துவங்கவுள்ளதால், வரும் சனிக்கிழமை முதல் சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்கு சாலை திறக்கப்படவுள்ளது.

Exit mobile version