பொதுமக்கள் நலன் கருதி மருத்துவர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி, மருத்துவம் படித்தவர்கள் சேவை மனப்பான்மையுடன் ஏழை எளிய மக்களுக்காக மருத்துவ பணியாற்ற வேண்டும் என்றும், அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தவே திட்டமிட்டு சில அரசு மருத்துவர்கள் போராடுவதாகவும் தெரிவித்துள்ளார்.மருத்துவர்களை இறைவனாக பார்க்கும் பொதுமக்களின் நலன் கருதி மருத்துவர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

குழந்தை சுஜித்தை உயிருடன் மீட்க, முடிந்தவரை போராடியதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். காழ்ப்புணர்ச்சியுடன் அரசை குறை சொல்வதே ஸ்டாலினின் வேலையாக உள்ளதாக குற்றம் சாட்டினார். 

Exit mobile version