நாடு முழுவதும் மருத்துவர்கள் இன்று போராட்டம்

தேசிய மருத்துவ ஆணைய மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மக்களவையில் நிறைவேற்றப்பட்ட தேசிய மருத்துவ ஆணைய மசோதா, மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் மருத்துவர்கள் இன்று போராட்டம் நடத்தி வருகின்றனர். ஒருநாள் அடையாள போராட்டத்திற்கு அனைத்து மருத்துவர்களும், மருத்துவ மாணவர்களும் ஒத்துழைப்பு தர வேண்டும் என இந்திய மருத்துவக் கழகம் கேட்டுக் கொண்டுள்ளது. 

Exit mobile version