மருத்துவர்கள், செவிலியர்கள் கொரோனா பாதித்து உயிரிழந்தால் நிதியுதவி!

மருத்துவர்கள் இறைவனுக்கு சமமாக போற்றப்படுகிறார்கள் என்று கூறியுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மருத்துவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என மீண்டும் உறுதியளித்துள்ளார்.  கொரோனா நோய்த் தடுப்புப் பணியில் அரும்பணியாற்றி வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவத்துறையைச் சேர்ந்த பணியாளர்கள் கொரோனா பாதித்து உயிரிழந்தால் 50 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே அறிவித்திருந்தார். மேலும் பல முக்கிய அறிவிப்புகளையும் வெளியிட்டிருந்தார். இதற்காக, இந்திய மருத்துவர்கள் சங்கத்தின் தமிழ்நாடு தலைவர் மருத்துவர் சி.என். ராஜா, தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் மருத்துவர் செந்தில், தமிழ்நாடு அரசு செவிலியர்கள் சங்கத்தின் தலைவர் வளர்மதி ஆகியோர் காணொலிக் காட்சி மூலமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தங்களது  நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர். அப்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மருத்துவர்கள் இறைவனுக்கு சமமாக போற்றப்படுவதாகக் கூறினார்.

Exit mobile version