சென்னை மாதவரத்தில் மருத்துவர் என கூறி திருமணம் செய்த போலி மருத்துவரை மாதவரம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை வில்லிவாக்கம் வெங்கடேச நகரில் வசித்து வருபவர் கார்த்திக் வயது 32 தான் ஒரு மருத்துவர் எனக்கூறி அதே பகுதியில் உள்ள ஒரு பெண்ணை பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துள்ளார். திருமணம் முடிந்து இரண்டு நாட்கள் கழித்து வரவேற்பு நிகழ்ச்சி சென்னை ரெட்டேரி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
அப்போது மது போதையில் இருந்த கார்த்திக்கின் மாமா மற்றும் உறவினர்கள் இடையே பணம் தருவதாக வந்த வாக்குவாதத்தில் கார்த்திக் போலி மருத்துவர் என்பது பெண் வீட்டாருக்கு தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த பெண்வீட்டார் கார்த்தி மற்றும் உறவினர்களை தர்ம அடி கொடுத்து மாதவரம் காவல்நிலையதிற்கு புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் கார்த்திக் மற்றும் உறவினர்களை கைது செய்த மாதவரம் காவல்துறையினர். இதுகுறித்து விசாரணை நடத்தி வந்தனர். முதல்கட்ட விசாரணையில் கார்த்திக் தன்னை அரசு மருத்துவர் என கூறி ஏமாற்றியது தெரியவந்தது. பின்னர் அவர் பயன்படுத்திய காரில் அரசு முத்திரை இருந்ததும் அதே வேளையில் அவர் பயன்படுத்திய காரின் எண் உண்மையான அரசு மருத்துவரின் எண் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
மேலும் கார்த்திக் செந்த ஊர் கோயமுத்தூர் என்பதும் திருமணத்தில் உறவுகள் என வந்தவர்கள் போலியான நபர்கள் என்பதும் இவன் சில மாதங்களுக்கு முன்புதான் வில்லிவாக்கம் வந்த்தும் விசாரணையில் தொரியவந்தது. மேலும் இதுகுறித்து மாதவரம் காவல்துறையினர் கார்த்திக்கு இதற்கு முன்பு வேறு யாராவது ஏமாற்றி திருமணம் செய்துள்ளாரா? அல்லது வரதட்சணை என்கின்ற பெயரில் பணம் பறிக்க முயன்று உள்ளாரா? வேறு ஏதாவது குற்றச் செயல்களில் ஈடுபட்டு உள்ளாரா என்கின்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.