பிரபல தனியார் பஸ் புக் செய்யும் நிறுவனம் ஒன்று வாடிக்கையாளர்களை கவர வித்தியாசமான அணுகுமுறையை கையாண்டுள்ளது.
இந்தியா முழுக்க பயணங்களுக்கான பஸ் தேர்வு செய்யும் அபி என்ற நிறுவனத்தை சுதாகர் ரெட்டி என்பவர் நடத்தி வருகிறார். இவரது நிறுவன செயலி மூலம் பஸ் தேர்வு செய்யும் வாடிக்கையாளர்களில் சிலரை தேர்வு செய்து அவர்களுக்கு சலுகைகள் வழங்கப்படும்.
தற்போது இந்த சலுகை பட்டியலில் வெங்காயமும் இணைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பஸ் புக் செய்த வாடிக்கையாளர்கள் பலர் இந்த சலுகையை பயன்படுத்தி வெங்காயத்தை தேர்ந்தெடுத்துள்ளனர். இந்த வரிசையில் கோவாவுக்கு செல்லும் சலுகையும் இருக்கிறது. ஆனால் வாடிக்கையாளர்களோ வெங்காயம் சலுகை தான் வேண்டுமென தேர்வு செய்துள்ளது அந்நிறுவனத்தை ஆச்சரியமடைய செய்துள்ளது. கிட்டத்தட்ட 54% பேர் வெங்காயத்தை தேர்வு செய்துள்ளனர் என அந்நிறுவனத்தார் கூறியுள்ளனர்.