நீங்கள் செல்ல நாய் பிரியரா? இங்கே போகாதீர்கள்.

 

உங்கள் செல்ல நாய் தற்கொலை செய்துகொண்டால் எப்படி இருக்கும்.நினைக்கவே கஷ்டமாக இருந்தால் நீங்கள் தவறியும் கூட போகக்கூடாத இடம் இந்த பாலம்தான்.

கிளாஸ்க்கோ மாகாணத்தின் ஸ்காட்டிஷ் நகரின் வடக்குப்புறமாக அரைமணி நேரப்பயணத்தில் உள்ளது  19ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த ஓவர்டவுன் இல்லம். இந்த இல்லத்தின் பின்புறமாக இருக்கும் பாலத்திற்கு நாய்கள் வந்தால் அவைகள்  தானே குதித்துத் தற்கொலை செய்து கொள்கின்றன.

அதிலும் சரியாக பாலத்தின் வலதுபுறமாக இருந்து மட்டுமே குதிக்கின்றன. தன் செல்ல நாய்க்குட்டிகளோடு அங்கு சென்ற பலர் குட்டிகளை இழந்துள்ளனர். இதில் தப்பித் பிழைத்த நாய்கள் சில மட்டுமே. அப்படி தப்பிய நாயின் உரிமையாளர் கூறுகையில் ,

அது வரையில் அமைதியாக வந்தது. அந்த இடம் வந்ததும் கட்டுப்பாட்டை இழந்து ஏதேதோ செய்தது.கட்டுப்பாடின்றி ஓடிப்போய் வலதுபக்கமாய் தவ்விகுதித்து விட்டது. நல்லவேளையாக புதரொன்றின் மீது விழுந்தது. வீட்டுக்கு வந்தபிறகும் இரண்டு நாட்கள் ஏதோ போல் இருந்தது.இப்போது பரவாயில்லை” என்கிறார்.

இதற்கு விடை காணும் விதமாக பலரும் பல முடிவுகளைத் தெரிவித்தனர். இருந்தபோதும் மற்ற இடங்களிலும் அதேபோல் நிலைமை இருந்தும் நாய்கள் தற்கொலை செய்துகொள்வதில்லை. இங்கு மட்டும் ஏன் என்கிற கேள்விக்கு மட்டும் விடை கிடைத்தபாடில்லை.

Exit mobile version