சிவகார்த்திகேயனின் அடுத்த பட ஹீரோயின் யார் தெரியுமா?

நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் ஹீரோயின் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

‘நம்ம வீட்டுப்பிள்ளை’ படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக “ஹீரோ”, ‘இன்று நேற்று நாளை’ பட இயக்குநர் படம், ‘ஒருநாள் கூத்து’ நெல்சன் இயக்கத்தில் இரு படம், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு படம் என பிசியாக நடித்து வருகிறார்.

இதில் நெல்சன் இயக்கும் படத்திற்கு கதாநாயகியாக பிரியங்கா அருள் மோகன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் நடிக்கும் முதல் தமிழ் படம் இதுவாகும்.ஏற்கனவே பிரியங்கா தெலுங்கில் நானி நடிப்பில் மெகா ஹிட் ஆன ‘கேங் லீடர்’ படத்தில் ஹீரோயினாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version