கோவா திரைப்பட விழாவில் இடம்பெறும் தமிழ் திரைப்படங்கள் எது தெரியுமா?

இந்திய அரசின் திரைப்படத்துறை சார்பில் ஆண்டுதோறும் இந்திய சர்வதேச திரைப்பட விழா பல்வேறு இடங்களில் நடைபெறுகிறது. இந்த ஆண்டு சர்வதேச திரைப்பட விழா பொன்விழா ஆண்டு என்கிற சிறப்பை பெறுகிறது.

இந்நிகழ்வில் நடிகர் ரஜினிக்கு “ஐகான் ஆஃப் கோல்டன் ஜூப்ளி” விருது வழங்கப்படுகிறது. வரும் 20ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடைபெறும் இதன் தொடக்க விழாவை நடிகர் அமிதாப்பச்சன் தொடங்கி வைக்கிறார். மேலும் பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.

இந்த ஆண்டு கோவா திரைப்பட விழாவில் 76 நாடுகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையிட தேர்வாகியுள்ளன. இதில் தமிழ் மொழியில் இருந்து “ஒத்த செருப்பு”, “ஹவுஸ் ஓனர்” ஆகிய படங்கள் இந்தியன் பனோரமாவுக்காக தேர்வாகியுள்ளன. இதனை தவிர்த்து 26 இந்தியாவின் மற்ற மொழி திரைப்படங்கள், 18 குறும்படங்கள் திரையிடப்படவுள்ளன.

இதில் சிறப்பம்சமாக “பிலிம் பஜார்” என்ற நிகழ்வு நடைபெறும். இதில் திரையிட 128 திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழில் இருந்து “கூழாங்கல்” என்ற படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version