அஜித் பற்றி அட்லி என்ன சொன்னார் தெரியுமா?

அட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா நடித்துள்ள “பிகில்” திரைப்படம் தீபாவளி வெளியீடாக இன்று வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இதனை முன்னிட்டு இயக்குநர் அட்லி ட்விட்டரில் #AskAtlee என்ற ஹேஷ்டேக்கில் ரசிகர்களிடம் கலந்துரையாடினார். இதில் ரசிகர்கள் கேட்ட கேள்வி மட்டுமல்லாமல் நடிகர் கதிர், பாடலாசிரியர் விவேக் ஆகியோரின் கேள்விகளுக்கும் பதிலளித்தார்.

அப்போது அட்லியிடம் ரசிகர் ஒருவர், “அஜித்” பற்றி ஒரு வார்த்தையில் கூறுங்கள் என்ற கேள்வியை முன்வைத்தார்.

 

அதற்கு பதிலளித்த அட்லி, “அஜித் மீது நான் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். அவரின் சமீபத்திய படங்களான விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை படங்கள் எனக்கு ரொம்ப பிடித்தது” என கூறியுள்ளார்.அஜித் பற்றிய அட்லி தெரிவித்த கருத்தை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

Exit mobile version