பறவைகள் பலவிதம்…ஒவ்வொன்றும் ஒருவிதம்…என தமிழில் ஒரு பாடல் உண்டு. அப்படியான பறவைகளில் பல இனங்கள் உண்டு. பார்ப்பதற்கே மிக அழகாக, வெவ்வேறு வகையான தோற்றங்களுடன் காணப்படும் பறவைகளை பிடிக்காதவர்கள் நம்மில் உண்டா என்ன… ஆனாலும் உலகில் சில பறவைகள் பார்ப்பதற்கே பயங்கரமாகவும், மிகப்பெரியதாகவும் காணப்படுகின்றன.
royal albatross:
கடற்பறவைகளில் மிகப்பெரிய பறவையினம் இந்த royal albatross. இதன் இரண்டு சிறகுகளின் ஒட்டுமொத்த நீளம் 3 மீட்டர்.கிட்டத்தட்ட ஒரு குட்டி விமானம் பறந்து வருவதை போல அசால்டாக பறந்து வந்து மீன்களை வேட்டையாடும்.இவை 7 முதல்10 கிலோ எடை கொண்டவையாக உள்ளன.
Kori bustard:
18 கிலோ எடை வரை இருக்கும் Kori bustard பறவை தான் உலகிலேயே மிகப்பெரிய பறக்கும் வல்லமை கொண்ட பறவை இனம் என கூறப்படுகிறது.. இருந்தாலும் இதைவிட பெரிய பறவையினங்கள் இருக்க வாய்ப்புள்ளது.. இவை தெற்கு ஆப்பிரிக்க நாடுகளில் அதிகம் வசிக்கின்றன. இவை பூச்சிகள் மற்றும் தானியங்களை அதிகளவில் உண்கின்றன.
Dalmatian Pelican:
Dalmatian Pelican என்ற இப்பறவையினமும் உலகின் மிகப்பெரிய பறவையினங்களின் பட்டியலில் முன்னணியில் இருக்கிறது..வாத்து இனத்தை சேர்ந்த இப்பறவையினம், ரஷ்யா மற்றும் மங்கோலியா , சீனா பகுதிகளில் வாழ்கின்றன.. ஆறுகள், ஏரிகள், டெல்டாக்களில் உள்ள மீன்கள் உள்ளிட்டவற்றை உண்டு வாழ்கின்றன. இவையும் 15 கிலோ வரை வளர்கின்றன.