காபூலில் குடிநீர் மற்றும் உணவின் விலை எவ்வளவு தெரியுமா?

ஆப்கானிஸ்தானின் காபூல் விமான நிலையத்திற்கு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அங்கு குடிநீரும், உணவும் மிக அதிக விலைக்கு விற்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தாலிபன்கள் பிடியில் இருந்து தப்பிச் செல்ல ஏராளமானோர் காபூல் விமான நிலையத்திற்கு சென்ற வண்ணம் உள்ளனர்.

பெண்களும், குழந்தைகளும் அங்கு குவிந்திருப்பது பார்க்கவே துயரமாக இருப்பதாக கூறும் பொதுமக்கள், அங்கு ஒரு பாட்டில் குடிநீர் சுமார் 3 ஆயிரம் ரூபாய்க்கும், ஒரு தட்டு உணவு 7,500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்தனர்.

Exit mobile version