ஐயப்பன் கோவில் விவகாரத்தில் மரபை மீறக் கூடாது – பொன். ராதாகிருஷ்ணன்

சபரிமலை ஐயப்பன் கோவிலின் மீது காலம் காலமாக இருக்கும் நம்பிக்கையை யாராலும் அழிக்க முடியாது என்று, மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்.

பெரம்பலூர் மாவட்டம் அந்தியூர் கிராமத்தில் பொது சுகாதாரத் துறை சார்பில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நல வாழ்வு மையம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். பா.ஜ.க.வின் கொல்லைப் புறமாக தமிழகம் மாறிவிட்டது என கமல் சொன்னால், அதில் அவரும் ஒரு அங்கம் எனத் தெரிவித்தார்.

இந்தியா முழுவதும் உள்ள ஐயப்பன் கோவிலுக்கு பெண்கள் செல்வதை சுட்டிக் காட்டிய அவர், சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பெண்கள் செல்லக்கூடாது என்பது தொன்று தொட்டு வரும் நம்பிக்கை என்றார். எனவே, அதை மீறக்கூடாது என்று பக்தர்கள் வலியுத்தி வருவதாக அவர் கூறினார்.

Exit mobile version