தேர்தல் பிரச்சாரத்தின் போது ராணுவ வீரர்களின் புகைப்படங்களை பயன்படுத்த கூடாது

தேர்தல் பிரச்சாரத்தின் போது ராணுவ வீரர்களின் புகைப்படங்களை பயன்படுத்த கூடாது என அரசியல் கட்சிகளுக்கு தலைமை தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக அரசியல் கட்சிகளுக்கு தலைமை தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள கடிதத்தில், அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் பிரச்சாரம் மற்றும் விளம்பரங்களில் பாதுகாப்புப் படையினரின் படங்களையோ, பாதுகாப்புப் படையினர் தொடர்புடைய நிகழ்ச்சிகளின் படங்களையோ பயன்படுத்தக் கூடாது என்று கடந்த 2013-இல் ஏற்கெனவே தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அத்தகைய படங்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று மீண்டும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

Exit mobile version