"திமுக அரசை இனியும் நம்பாதீர்கள்"

நீட் தேர்வு தோல்வி பயத்தால் தற்கொலை செய்து கொண்ட வேலூர் மாணவி குடும்பத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ட்விட்டரில் பதவிட்டுள்ள அவர், நீட்டிற்கு வேலூர் மாவட்டம் தலையாரம்பட்டு கிராமத்தை சேர்ந்த மாணவி தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி அறிந்து, பெற்றோராக தனது மனவருத்தத்தை சொல்ல வார்த்தைகளே இல்லை என கூறியுள்ளார். செப்டம்பர் 14ம் தேதி வெளியிட்ட அறிக்கையின்படி, ஆசிரியர், உளவியல் நிபுணர் மற்றும் கல்வியாளர் அடங்கிய குழுவை அமைத்து, நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் மனதில் தன்னம்பிக்கையையும், தைரியத்தையும் அளிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். மாணவர்கள், விபரீதமான இத்தகைய முடிவினை இனி ஒருபோதும் எடுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்ட அவர், இனியும் இந்த அரசை நம்ப வேண்டாம் என்றும் வலியுறுத்தியுள்ளார். மருத்துவர்தான் ஆக வேண்டும் என்று இல்லை என்று குறிப்பிட்டு அவர், 42-க்கும் மேற்பட்ட மருத்துவ இணை படிப்புகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மாணவன் நினைத்தால் நடத்திக் காட்டுவான், அவன் நெஞ்சம் ஒரு நெருப்பு, அவன் நேர்மையின் மறு பிறப்பு என்ற பாடல் வரிகளை நினைவுகூர்ந்த எடப்பாடி பழனிசாமி, மாணவி சௌந்தர்யாவின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொண்டுள்ளார்.  

Exit mobile version