கலவரத்தை தூண்டும் விதமாக சமூக வலைதளத்தில் பதிவிட கூடாது : மீறினால் குண்டர் தடுப்பு சட்டம் பாயும்

சாதி கலவரத்தை தூண்டும் விதமாக சமூக வலைதளத்தில் கருத்து பதிவிடும் நபரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்குமாறு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களுக்கு டிஜிபி டி.கே. ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் இருசமூகத்தினரிடையே கலவரத்தை தூண்டிவிட்டு சமூக வலைத்தளங்களில் கருத்து வெளியிட்ட கடலூரை சேர்ந்த சிவக்குமாரை கைது செய்த போலீசார், அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையிலடைத்தனர்.

இந்தநிலையில் தமிழகத்தில் கலவரத்தை தூண்டும் விதமாக யாரெனும் சமூக வலைதளங்களில் வீடியோ அல்லது கருத்து பதிவிட்டால் அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய காவல்துறை இயக்குநர் டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அனைத்து காவல் ஆணையர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் ஆகியோருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version