சாலையோரம் நிற்கும் யானைகளை தொந்தரவு செய்ய வேண்டாம் :வனத்துறை அதிகாரிகள்

தாளவாடி அடுத்த ஆசனூர் வனப்பகுதியில் தண்ணீர் தேடி சாலையோரம் நிற்கும் யானைகளை தொந்தரவு செய்ய வேண்டாம் என வனத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

கோடை காலம் துவங்கியுள்ள நிலையில், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட தாளவாடி, ஆசனூர், தலமலை மற்றும் ஜீரகள்ளி வனப்பகுதியில் வறட்சி நிலவி வருகிறது. அங்கு கடந்த சில நாட்களாக மழை பெய்த போதிலும் இந்த பகுதியில் வசிக்கும் யானைகள்,மான்கள், சிறுத்தை உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் உணவு மற்றும் தண்ணீருக்காக சாலையோரப் பகுதிகளுக்கு வருகின்றன.

குறிப்பாக யானைகள் உணவுக்காக நீண்ட நேரம் சாலையோரம் நிற்பதால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் விலங்குகளை தொந்தரவு செய்வதாக கூறப்பட்டது. இதனையடுத்து, புகைப்படம் எடுப்பது மற்றும் வனவிலங்குகளை தொந்தரவு செய்வது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என பொதுமக்களை வனத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Exit mobile version