வாக்குபதிவு நடைபெறுவதற்கு முன்னதாக தேர்தல் அறிக்கைகளை வெளியிடக் கூடாது

வாக்குபதிவு நடைபெறுவதற்கு முன்னதான 48 மணிநேரத்தில் தேர்தல் அறிக்கைகளை அரசியல் கட்சிகள் வெளியிடக் கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

17வது மக்களவைக்கான பொதுத்தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருப்பதால் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. மேலும் தேர்தல் சமயத்தில் அரசியல் கட்சிகள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்தும் தேர்தல் ஆணையம் அவ்வபோது உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. இந்தநிலையில் இனி வாக்குபதிவு நடைபெறுவதற்கு முன்னதான 48 மணிநேரத்தில் தேர்தல் அறிக்கைகளை அரசியல் கட்சிகள் வெளியிட கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மக்கள் பிரநிதித்துவ சட்டத்தின் 126வது பிரிவின்படி இந்த உத்தரவு 7 கட்டங்களாக நடைபெறும் தேர்தலுக்கும் பொருந்தும் என சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இதனால் 7 கட்டங்களாக நடைபெறும் வாக்குபதிவின்போது தனித்தனியாக அமலுக்கு வரும் அமைதி நேரத்தில் அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கைகளை வெளியிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version