அதிக காற்று ஒலி மாசு தரும் பட்டாசுகளை வெடிக்க வேண்டாம் -அமைச்சர் கே.சி.கருப்பணண்

தீபாவளி பண்டிகையின் போது அதிக காற்று ஒலி மாசு தரும் பட்டாசுகளை வெடிக்க வேண்டாம் என சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணண் கேட்டுக்கொண்டுள்ளார்.

சென்னை பள்ளிக்கரணையில் 90 ஏக்கர் பரப்பளவில் உள்ள சதுப்பு நிலத்தை அமைச்சர் கருப்பணண் பார்வையிட்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதற்கட்டமாக 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் படகு குழாம் மற்றும் பூங்கா அமைக்க இருப்பதாக தெரிவித்தார்.

பள்ளிக்கரணை பகுதியில் உள்ள குப்பை கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிப்பது குறித்தும், தீபாவளி பண்டிகையின் போது மாலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை பட்டாசு வெடிக்க அனுமதி வழங்குவது குறித்தும் ஆலோசனை நடைபெற்று வருவதாக கூறினார்.

அதிக காற்று மற்றும் ஒலி மாசு ஏற்படுத்தக் கூடிய பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும் எனவும், அதிக மாசு ஏற்படும் இடங்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மூலம் கண்காணிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Exit mobile version