கோவா முதலமைச்சர் குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்

கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கரின் உடல்நிலை குறித்து சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஷ்வாஜித் ரானே தெரிவித்துள்ளார்.

கோவா மாநில முதலமைச்சராக இருக்கும் மனோகர் பாரிக்கர் கணைய அழற்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவுக்கு சென்று சிகிச்சை பெற்றபோதும் அவரது உடல்நிலை சீராகவில்லை. இதனிடையே மீண்டும் உடல்நிலை மோசமானதால் கோவா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மனோகர் பாரிக்கர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்தநிலையில் மனோகர் பாரிக்கரின் உடல்நிலை நன்றாக இருப்பதாக கூறிய சுகாதாரத்துறை அமைச்சர் விஷ்வாஜித் ரானே, சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.

Exit mobile version