டெங்கு, பன்றிக்காய்ச்சல் குறித்த தேவையற்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டுள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டெங்கு மற்றும் பன்றிக்காய்சலுக்குத் தேவையான மருந்துகள் கைவசம் உள்ளதாக கூறினார். மேலும் டெங்கு குறித்து தேவையற்ற வதந்திகளை நம்பவேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டார்.
பன்றிக்காய்ச்சலை கட்டுப்படுத்தும் 19 லட்சம் மாத்திரைகளை பாதிக்கப்பட்டவர்களுக்கும், அவரது குடும்பங்களுக்கும் தமிழக அரசு இலவசமாக வழங்கி வருவதாக ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
கைகளை நன்றாக கழுவுவதன் மூலம் காய்ச்சல் பரவாமல் தடுக்க முடியும் என்றும், காலிமனைகள், காலி இடங்களில் தண்ணீர் தேங்காமல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.