பைக் என்றாலே இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.வளர்ந்து வரும் தொழில்நுட்ப காலத்தில் சுற்றுச்சூழலை பாதுகாப்பது மிக அவசியமான ஒன்று. இதன் காரணமாக தான் மற்ற நாடுகள் சுற்றுசூழலுக்கு தீங்கு விளைவிக்காத எலக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்துகின்றனர். இந்தியாவில் குறைந்த அளவில் மட்டுமே எலக்ட்ரிக் வாகனம் பயன்படுத்தும் நிலையில்,தற்போது அதை மற்ற கார் மற்றும் பைக் நிறுவனங்கள் எலக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தற்போது சென்னையில் எலக்ட்ரிக் வாகனமான ஏத்தெர் 450 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது .எலக்ட்ரிக் பைக் என்றலே அனைவரும் யோசிப்பது மைலேஜி திறன்.அதை முறியடிக்கும் வகையில் அனைவராலும் கவரக்கூடிய ஒரு பைக்கை அறிமுகம் ஏத்தெர் எனர்ஜி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த பைக் வெள்ளை நிறத்தில் மட்டும் கிடைக்கிறது.மற்ற பைக்கில் உள்ளது போல் இந்த பைக்கில் இன்ஜின் பொருத்தவில்லை.அதற்கு பதிலாக எலெக்ட்ரிக் மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதை 4 மணி நேரம் சார்ஜ் செய்தால் 75கி.மீ வரை செல்ல கூடிய திறன் உடையது. இந்த பைக்கை சார்ஜ் செய்துகொள்ள சென்னையில் 10 இடங்களில் சார்ஜிங் பாயிண்ட் அமைக்கப்பட்டுள்ளது.நாளடைவில் இது சென்னை முழுவதும் விரிவாக்கம் செய்யப்படும் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது
இந்த பைக் முழுக்க முழுக்க டிஜிட்டல் வசதிகளை கொண்டது. ஒரு ஆண்ட்ராய்டு மொபைல் என்றும் கூட கூறலாம் .எலக்ட்ரிக் பைக் என்றவுடன் அனைவருக்கும் ஒரு கேள்வி கேட்க தோன்றும், ஆம்.. பாட்டரியில் சார்ஜ் இல்லை என்றால் என்ன செய்வது ? என்ற கேள்வி தான். கவலை வேண்டாம் சார்ஜ் குறைவதற்கு முன்பே பைக் தொடுதிரையில் சார்ஜ் குறித்த தகவல்களை கூறிவிடும்.மேலும் எவளோ கி.மீ வேகத்தில் செல்ல வேண்டும் என்பதையும் கூறி எச்சரித்துவிடும்.
இது மட்டும் அல்லாமல் எந்த பைக்கிலும் இல்லாத ஒரு அசத்தலான வசதி இந்த பைக்கில் உள்ளது .அதுதான் ரிவர்ஸில் செல்லும் வசதி .இது பைக்கை பார்க் செய்ய உதவியாக இருக்கும்.இவ்வாறாக புதிய வசதிகளுடன் களமிறங்கியுள்ள இந்த பைக் மற்ற பைக்குகளுக்கு போட்டியாக இருக்குமா? என்பதை நாம் பொறுத்துதான் பார்க்க வேண்டும்