விஜயகாந்த் உடல் தேறி பிரசாரம் செய்தால் திமுக காணாமல் போய்விடும் – அமைச்சர் சி.வி.சண்முகம்

தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் உடல் நிலை சரியாக இருந்து பிரசாரம் செய்தால், திமுக காணாமல்  போய் விடும் என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

விக்கிரவாண்டி தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு தேமுதிக செயல் வீரர்கள் கூட்டம் கஞ்சனூரில் நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்துக் கொண்டு சிறப்புரையாற்றினார். மக்களவை தேர்தலின் போது பொய் பிரசாரங்கள் மூலம் மக்களின் வாக்குகளை ஸ்டாலின் பெற்றதாகவும், தற்போது மக்கள் வாக்களித்தது தவறு என்று உணர்ந்து விட்டதாகவும் கூறினார். பாட்டாளிகள் நிறைந்த அதிமுக கூட்டணியை யாராலும் பிரிக்க முடியாது என்றும், இந்த கூட்டணி உள்ளாட்சி மற்றும் அடுத்த சட்டமன்ற தேர்தலிலும் தொடரும் என்றார் அவர்.

Exit mobile version