திமுக தொடர்ந்த அவதூறு வழக்கில் நீதிமன்றத்தில் வைகோ ஆஜராகாததால் தீர்ப்பு வரும் 30ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2006 ஆம் ஆண்டு, மதிமுகவை உடைக்க கருணாநிதி முயற்சி செய்வதாக அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு வைகோ கடிதம் எழுதியதோடு, கருணாநிதியை கடுமையாக விமர்சித்தார். இதையடுத்து, வைகோ மீது திமுக அவதூறு வழக்கு தொடர்ந்தது. இது தொடர்பாக, குற்றச்சாட்டு பதிவு மற்றும் சாட்சிகள் விசாரணை என அனைத்தும் சிறப்பு நீதிமன்றத்தில் நிறைவடைந்தது. இந்நிலையில் சிறப்பு நீதிமன்றத்தில் தீர்ப்பு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், வைகோ நேரில் ஆஜராகததால் நீதிபதிகள் தீர்ப்பை வரும் 30ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.