மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு எதிராக திமுக தொடர்ந்த அவதூறு வழக்கில், சென்னை சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.
மதிமுக-வை உடைக்க, தமிழக முதல்வர், கருணாநிதி முயற்சி செய்கிறார்’ என, 2006ல், அப்போதைய பிரதமர், மன்மோகன் சிங்கிற்கு, வைகோ கடிதம் எழுதினார். இக்கடிதத்தின் அடிப்படையில், அப்போதைய திமுக அரசு சார்பில், வைகோவுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடரப்பட்டது. சென்னையில் உள்ள, எம்.பி., – எம்.எல்.ஏ.,க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில், இந்த வழக்கு நடந்து வந்தது. இருதரப்பு விசாரணை முடிந்த நிலையில், 26ம் தேதி, தீர்ப்பு வழங்க இருந்த நிலையில், மருத்துவமனையில், வைகோ அனுமதிக்கப் பட்டிருந்ததால், அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து, திமுக தொடர்ந்த அவதூறு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இதனால் வைகோவின் மாநிலங்களை பதவிக்கு ஆபத்துள்ளதாக கூறப்படுகிறது.