தி.மு.க. ஜெகத்ரட்சகனின் குடும்ப சொத்து மதிப்பு

தி.மு.க.வின் முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் தனது குடும்ப உறுப்பினர்கள் மூலம் வெளிநாடுகளில் கோடிக்கணக்கில் முதலீடு செய்துள்ளது தெரியவந்துள்ளது. அரக்கோணம் திமுக வேட்பாளரான ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான சில்வர் பார்க் இன்டர்நேஷனல் என்ற சிங்கப்பூர் நிறுவனம் இலங்கையில் எண்ணெய் சுத்திகரிப்பு வர்த்தகத்தில் 26 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதாக இலங்கை அரசு அறிவித்திருக்கிறது.

சில்வர் பார்க் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் இயக்குநர்களாக ஜெகத்ரட்சகனின் மகள் நிஷா, ஜெகத்ரட்சகன் மகன் சந்தீப் ஆனந்த், ஜெகத்ரட்சகனின் மனைவி அனுசுயா ஆகியோர் இந்நிறுவனத்தில் இயக்குநர்களாக இருந்துள்ளதாக பதிவு ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், நாடாளுமன்ற வேட்பாளரான ஜெகத்ரட்சகன் வேட்புமனுத் தாக்கல் செய்தபோது, தன் பெயரில் 2 கோடியே 63 லட்சத்து 43 ஆயிரத்து 519 மதிப்பிலான அசையும் சொத்துக்களும், 10 கோடியே 99 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய் மதிப்பில் அசையா சொத்துக்களும் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மனைவி அனுசுயா பெயரில் 43 கோடியே 16 லட்சத்து 29 ஆயிரத்து 747 ரூபாய் மதிப்பில் அசையும் சொத்துக்களும், 57 கோடியே 91 லட்சத்து 4 ஆயிரத்து 631 ரூபாய் மதிப்பில் அசையா சொத்துக்களும் உள்ளதாக அதில் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் கணக்கில் காட்டப்பட்ட அவரது சொத்துமதிப்பு 114 கோடியே 69 லட்சத்து 84 ஆயிரத்து 897 ரூபாய் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் வெளிநாட்டில் ஜெகத்ரட்சகனின் குடும்பத்தினர் சுமார் 26ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளனர். இது கணக்கில் காட்டப்பட்ட ஜெகத்ரட்சகனின் சொத்துமதிப்பை விட 228 மடங்கு அதிகம் ஆகும்.

மேலும் ஜெகத்ரட்சகன் குடும்பத்தினர்கள் ஜெருசலேம் கல்வி அறக்கட்டளை, ஜசான் இன்பிரா பிரைவேட், ஜெ.ஆர் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை உள்ளிட்ட 20-க்கு மேற்பட்ட நிறுவனங்களில் பங்குதாரராகவும், இயக்குநராகவும் இருந்து வருகின்றனர். இதன் மூலமும் அவர் கூடுதலான கணக்கில்காட்டப்படாத சொத்துக்களை நிர்வகிக்கப்பதாக கூறப்படுகிறது.

Exit mobile version