கடந்த ஓராண்டில் திமுகவின் வருமானம் 800 சதவீதம் அதிகரித்துள்ளது அம்பலமாகியுள்ளது. கடந்த 2016 – 17 கால கட்டத்தில் திமுகவின் வருமானம் 3 கோடியே 78 லட்சமாக இருந்தது. அதேநேரம் 2017-18 காலகட்டத்தில் 35 கோடியே 74 லட்சமாக உயர்ந்துள்ளது. இது சுமார் 845 சதவீத உயர்வாகும்.
தேர்தல் ஆணையத்தில் திமுகவே தாக்கல் செய்துள்ள ஆவணங்கள் மூலம் இது தெரியவந்துள்ளது. நாட்டிலேயே சமாஜ்வாதி கட்சிக்கு அடுத்தபடியாக அதிக வருமானம் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.