மதுரை அய்யம்பாளையத்தில் சட்ட விரோதமாக கல்குவாரி வைத்து, அதில் அளவுக்கு அதிகமாக கற்கள் வெட்டி எடுத்தது தொடர்பான வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2014-ஆம் ஆண்டு மதுரை மாவட்டம் அய்யம்பாளையத்தில் சட்டவிரோதமாக கல்குவாரி வைத்திருந்ததாகவும், அதிலிருந்து அளவுக்கு அதிகமாக கற்கள் வெட்டி எடுக்கப்பட்டது எனவும் முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி மீது வழக்கு பதியப்பட்டு இருந்தது. அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அவரை வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவிட்டது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் இந்திரா பானர்ஜி அமர்வு, இந்த மனு தொடர்பாக ஐ.பெரியசாமி பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.