திமுகவின் தேர்தல் அறிக்கையும்… இரட்டை வேடமும்…

மீத்தேன் போன்ற சுற்றுச்சூழலை பாதிக்கக்கூடிய திட்டங்களை கைவிட மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என திமுக தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் திமுகவின் இரட்டை வேடம் குறித்து விவரிக்கிறது இந்த சிறப்பு தொகுப்பு…

காவிரி பாய்ந்தோடும் டெல்டா மாவட்டங்களின் பசுமையை காணும் அனைவருக்கும் ஒருவித மன நிம்மதி ஏற்படும்… ஏனெனில் டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் விவசாயம், தமிழக மக்களின் அன்றாட பசியை போக்குவதுடன் அவர்களின் வாழ்வியல் முன்னேற்றத்திற்கும் உதவுகிறது…

ஆனால் இதற்கு வேட்டு வைக்கும் வகையில் 2006 முதல் 2011ஆம் ஆண்டு வரை 5 ஆண்டுகள் தமிழகத்தில் ஆட்சியிலிருந்த திமுக ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்டது… அதுதான் டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் எடுக்கும் திட்டம்… இயற்கையை அழித்து பணம் செழிக்கும் பேரழிவு திட்டத்திற்கு முதலில் அனுமதி அளித்து, இரட்டை வேடத்திற்கு பெயர்போன திமுக, தற்போது நீர்வளத்தையும் நிலவளத்தையும் பாதிக்கும் வகையில் கொண்டுவரப்படும் மீத்தேன் முதலிய திட்டங்களை கைவிட நடவடிக்கைகள் எடுப்போம் என கூறுவது உண்மையில் வேடிக்கையாக உள்ளது…

690 சதுர கிலோ மீட்டர் பசுமை சூழ்ந்த நிலத்தை, பாலைவனமாக்கும் மீத்தேன் திட்டத்தை செயல்படுத்த அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசு தீர்மானித்தபோது, ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டு பேரழிவுக்கு பச்சைக்கொடி காட்டியவர் அப்போதைய துணை முதலமைச்சராக பதவி சுகம் அனுபவித்த மு.க.ஸ்டாலின்… ஒரு கட்டத்தில் மக்கள் விழித்துக்கொண்டதை உணர்ந்த திமுக, மீண்டும் தமிழக மக்களை முட்டாளாக்கும் முயற்சியை மேற்கொண்டிருப்பதாக அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர். ஆனால் துரோகத்திற்கு பெயர்போன திமுகவுக்கு தமிழக மக்கள் முடிவுரை எழுதுவார்கள் என்பதில் சந்தேகமில்லை…

Exit mobile version