இந்தி எதிர்ப்பு விவகாரத்தில் திமுக இரட்டை வேடம்

திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி காலத்தில் இந்தி எதிர்ப்பு என்ற பிம்பத்தில் போலியான போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. இதற்கு உதாரணமாக திமுக மூத்த தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள் உள்பட அக்கட்சி பிரமுகர்கள் அனைவரும் தங்கள் பிள்ளைகளை இந்தியை படிக்க வைக்கின்றனர். இதில், ஏமாற்றப்பட்டது மக்களும், திமுக தொண்டர்களுமே. தமிழ், தமிழர் என்று பேசும் திமுகவினர், சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு, நடந்து கொள்வதை, அவர்களின் விளம்பர பேனர்களும் நிரூபிக்கும். தேர்தல் நேரங்களில் இந்தி பேசும் மக்கள் வசிக்கம் பகுதிகளில், இந்தியை பிரதானப்படுத்தி பிரசாரம் செய்து ஏமாற்றுவதை மக்கள் நன்கு அறிவார்கள்.

Exit mobile version