தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை கூறி திமுக வெற்றி பெற்றது: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை கூறி மக்களை ஏமாற்றி திமுக வெற்றி பெற்றதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.

வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி. சண்முகத்தை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, நடந்து சென்று வாக்கு சேகரித்த முதலமைச்சருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தமிழகம் முழுவதும் 18 லட்சம் தாய்மார்களுக்கு அம்மா பரிசு பெட்டகம் வழங்கப்படுள்ளதாக கூறிய முதலமைச்சர், ஏழை எளிய மாணவர்கள் சட்டம் பயிலும் வகையில் 6 புதிய சட்டக்கல்லுரிகள் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். சட்டம் ஒழுங்கில் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்வதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார்.

இதேபோல் ஆம்பூரில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வகுத்த வழியில் ஆட்சி நடைபெற்று வருவதாக கூறினார். விவசாயிகளுக்கு சொன்ன வாக்குறுதிகளை தவறாத விவசாயி நான் என்று முதலமைச்சர் தெரிவித்தார்.

Exit mobile version