சென்னையில் கொரோனா விதிமுறைகளை மீறி திமுகவினர் நடத்திய போராட்டத்தில் பங்கேற்ற 3 ஆயிரம் பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து சென்னை தாம்பரம், மதுரவாயல், செங்குன்றம், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உட்பட பல்வேறு பகுதிகளில் திமுகவினர் 3 ஆயிரம் பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், நோய் பரப்பும் விதத்தில் நடந்து கொண்டது, சட்டவிரோதமாக கூட்டத்தை கூட்டியது உட்பட 4 பிரிவுகளின் கீழ் திமுகவினர் 3 ஆயிரம் பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
கொரோனா நோயை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில், திமுகவினர் பாதுகாப்பு இடைவெளியின்றி ஒரே இடத்தில் கூடியது மக்களிடையே அச்சத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.