தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் வகையில் திமுக தேர்தல் வாக்குறுதிகள் இருப்பதாக குற்றம்சாட்டி இருக்கும் மீனவர் சங்க கூட்டமைப்பினர், கடலோர மாவட்டங்களில் திமுக படுதோல்வியை சந்திக்கும் என்று தெரிவித்துள்ளனர்.
சென்னையில் நியூஸ் ஜெ-வுக்கு பிரத்யேக பேட்டி அளித்த அந்த அமைப்பின் தலைவர் கோசுமணி இதனை தெரிவித்துள்ளார். திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ள சேது சமுத்திர திட்டம், கடலோரங்களில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை அமல்படுத்துவது, போக்குவரத்து நெரிசலை குறைக்க கடலில் பாலம் அமைப்பது போன்ற திட்டங்கள் முட்டாள்தனமானது என கூறினார். தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதிகள் இருப்பதாக குற்றம்சாட்டி இருக்கும் கோசுமணி, வரும் தேர்தலில் ஒட்டுமொத்த மீனவர்களும் திமுக-வுக்கு எதிராக வாக்களிப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள 14 கடலோர மாவட்டத்தில் உள்ள 38 தொகுதியிலும் திமுக வை தோற்கடிப்போம் என்று அவர் கூறி இருக்கிறார். மீனவர்களின் நலனில் அக்கறை கொண்டுள்ள அதிமுக, இந்த தேர்தலில் அமோக வெற்றி பெறும் என்றும் மீனவர் சங்க கூட்டமைப்பின் தலைவர் கோசுமணி தெரிவித்துள்ளார்.