ஆரணி அருகே கனிகிலுப்பை கிராமத்தை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் இரண்டரை ஏக்கர் பம்பு செட்டுடன் கூடிய விவசாய நிலம் வைத்துள்ளார். அதே கிராமத்தை சேர்ந்த திமுக வார்டு உறுப்பினர் ராஜேந்திரன் என்பவர் குறைந்த விலைக்கு விவசாய நிலத்தை தரும்படி கேட்டுள்ளார். தனது நிலத்தை தர ஹரிகிருஷ்ணன் மறுத்ததால் ஆத்திரமடைந்த திமுக வார்டு உறுப்பினர் ராஜேந்திரன், நிலத்திற்கு செல்லும் பொதுப் பாதையை ஆக்கிரமித்து கட்டடம் அமைக்க தொடங்கியுள்ளார். இதை தட்டிக் கேட்ட ஹரிகிருஷ்ணனுக்கு திமுக வார்டு உறுப்பினர் ராஜேந்திரன் கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும், விடியா அரசு அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்த உயர் அதிகாரி காலில் விழுந்து விவசாயி கதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Discussion about this post