வேலூரில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்ற கூட்டத்தை தொண்டர்கள் புறக்கணித்தால் பரபரப்பு நிலவியது.
வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்தை ஆதரித்து ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். இந்த பிரசார பொதுகூட்டத்திற்கு ஆட்கள் வராததால், இருக்கைகள் காலியாக இருந்தன. இதனால் திமுக நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர். திமுக வேட்பாளராக கதிர் ஆனந்தை அறிவித்ததற்கு எதிராக, திமுகவில் கடும் எதிர்ப்பு உள்ளது. துரைமுருகன் வீட்டில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுவதை தொடர்ந்து, எதிர்க் கட்சியாக இருக்கும் இவர்கள் ஆட்சிக்கு வந்தால், என்ன செய்வார்கள் என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
Discussion about this post