பொதுமக்கள் சரமாரி கேள்வி – தப்பிச் சென்ற தி.மு.க. எம்.பி.

சேலம் மாவட்டம் ஓமலூரில், தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினரிடம், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என பொதுமக்கள் சரமாரி கேள்வி எழுப்பியபோது, அவர் தப்பிச்சென்ற நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியது.

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள பெரியேரிபட்டி ஊராட்சியில் தி.மு.க.வைச் சேர்ந்த சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் பார்த்திபன், வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்வதற்காக சென்றுள்ளார். அப்போது, 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் நடைபெற்றுவரும் பணிகளை பார்வையிட்டார். பணியில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள், நாடாளுமன்ற உறுப்பினரை முற்றுகையிட்டு சரமாரி கேள்விக் கணைகளை தொடுத்தனர். விவசாயக் கடன், நகைக்கடன், கல்விக்கடன் ஆகியவற்றை தள்ளுபடி செய்வதாக, தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

ஆனால், தி.மு.க. எம்.பி. பார்த்திபன் பொதுமக்கள் எழுப்பிய கேள்விகளுக்கு மழுப்பலான பதிலை அளித்ததோடு, தப்பித்தோம் பிழைத்தோம் என்று அங்கிருந்து வேகமாக காரில் ஏறி சென்றுவிட்டார். உரிய பதிலளிக்காமல் நாடாளுமன்ற உறுப்பினர் தப்பிச் சென்ற நிகழ்வு பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Exit mobile version