பேரவையில் இருந்து தேவையின்றி வெளிநடப்பு செய்த திமுக

தமிழ்நாட்டின் வாழ்வாதாரம் பிரச்னை குறித்து பேச சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த திமுகவினர், தொடர்பில்லாத விஷயங்களை பேசி நேரத்தை வீணடித்ததுடன் அமளியில் ஈடுபட்டு அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறை குறித்து சட்டப் பேரவையில், சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கொண்டு வந்தார். தீர்மானத்தின் மீது பேசிய அவர், ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டு வரும் தமிழக அரசின் திட்டத்திற்கு வரவேற்பு தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி குறித்தும், தொடர்பில்லாத விஷயங்கள் குறித்தும் பேசி பேரவை நேரத்தை வீணடித்தார். தமிழக அரசின் திட்டங்களை மட்டுமே பேச வேண்டும் என சபாநாயகர் அறிவுறுத்தியும், அதனை ஏற்க மறுத்த திமுகவினர், அமைச்சர்களை பதில் கூறவிடாமல் தடுத்து அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து பேரவையில் இருந்து திமுக உறுப்பினர் தேவையின்றி வெளிநடப்பு செய்தனர்.

Exit mobile version