ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற இந்த திருமண விழவிற்கு வாரிசு அமைச்சர் உதயநிதியை வரவேற்கும் விதமாக பிரம்மாண்ட பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. இதற்கான செலவு மட்டுமே சுமார் 20 லட்சம் ரூபாய் என சமூக ஆர்வலகள் கூறி வருகின்றனர். மேலும், ஊராட்சிகளில் மேற்கொள்ளும் வளர்ச்சி பணிகளுக்கு, தலைவர்கள் அனைவருக்கும் ஒப்பந்தம் தருகிறேன் என கூறி 58 ஊராட்சி மன்ற தலைவர்களிடம், திருமண செலவிற்காக ஒன்றிய குழு தலைவர் எஸ்.டி.கருணாநிதி, 5 லட்சம் ரூபாய் வரை நிதி பெற்றுள்ளதாக ஊராட்சி மன்ற தலைவர்கள் புலம்பி வருவதாக கூறப்படுகிறது. ஒன்றிய குழு தலைவராக பதிவேற்ற ஒரே ஆண்டில், எப்படி 20 கோடி ரூபாய் செலவில் திருமணம் நடத்த முடியும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கேள்வி எழுப்பு வருகின்றனர்.
Discussion about this post