3வது அணியில் இடம் பிடிக்க திமுக பொருளாளர் துரைமுருகன் தூதுபோன நிகழ்வு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் திமுக அங்கம் வகித்து வருகிறது. இதனிடையே சென்னை வந்த தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து 3வது அணி குறித்து பேசினார். இந்தநிலையில் ஆந்திர மாநிலம் அமராவதிக்கு சென்ற திமுக பொருளாளர் துரைமுருகன், தேசிய அளவில் 3வது அணி அமைக்க தீவிரமாக முயற்சித்து வரும் மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்து ஆலோசித்தார். காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகித்துக்கொண்டே 3வது அணிக்கு தாவ திமுக தரப்பில் அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் தூதுபோனது காங்கிரஸ் தலைமையை அதிர்ச்சியடைய செய்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டே திமுக கூட்டணியில் சேர தேமுதிக முயற்சித்ததாக இல்லாத ஒன்றை திரித்துக்கூறிய துரைமுருகன், தற்போது காங்கிரசை கலற்றிவிடும் வகையில் சந்திரபாபு நாயுடுவிடம் தூது போயிருப்பது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.