திண்டுக்கல் அருகே, தமிழக அரசின் குடிமராமத்து திட்டத்தின் கீழ், பணிகள் சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில், திமுகவினர் வீண் புகார் அளிக்க வந்து காவல் நிலையத்தில் தகராறில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பாகாநத்தம் பகுதிகளில் தமிழக அரசின் குடிமராமத்து பணிகள் மும்முரமாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், அங்கு வந்த திமுகவினர் பணியில் ஈடுபடக்கூடாது என்று பணியாளர்களை மிரட்டியதோடு, போலியாக காவல்நிலையத்தில் புகார் அளிக்க வந்தனர். காவல்துறையினர் உடனடியாக அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசியபோது குடிமராமத்து பணிகள் நடைபெற்று வருவதாக அவர்கள் விளக்கம் அளித்தனர். இதனை திமுகவினரிடம் காவல்துறையினர் எடுத்துக்கூறியும், அதை கேட்காமல், காவல்நிலையத்தை முற்றுகையிட்ட திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதிலும் குடிமராமத்து பணிகள் சிறப்பாக நடைபெற்றுவருவதை பொறுத்துக் கொள்ள முடியாத திமுகவினர், இவ்வாறு பணிகளை தடுத்து நிறுத்துவது பொது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.