இடைத்தேர்தலில் திமுக பணம் பட்டுவாடா செய்ய திட்டம் – முதலமைச்சர் குற்றச்சாட்டு

கீழடி அகழ்வாய்விற்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்து தருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னையில் தமிழிசை சவுந்திரராஜனை மரியாதை நிமித்தமாக சந்தித்த முதலமைச்சர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தெலங்கானா ஆளுநராக தமிழிசை சவுந்திரராஜன் பதவியேற்றது, தமிழகத்திற்கு கிடைத்த பெருமை என பெருமிதம் தெரிவித்தார்.

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் திமுக பணம் பட்டுவாடா செய்ய திட்டமிட்டு இருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் மக்கள் ஆதரவுடன் அதிமுக அமோக வெற்றி பெறும் என தெரிவித்தார்.

மேகதாட்டு விவகாரத்தில் தமிழக அரசு சட்ட ரீதியாக அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மேகதாட்டு விவகாரம் தொடர்பாக மத்திய அரசிற்கு கடிதம் மூலமாகவும், நேரில் வலியுறுத்தியும் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக விளக்கமளித்தார். மேலும், டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் முதலமைச்சர் கூறினார்.

Exit mobile version