அதிமுகவுக்கு போட்டியாக அடித்தட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்குவதாக பெருமை பேசும் குன்னூர் திமுக நிர்வாகிகள் 150 பேருக்கு டோக்கன் கொடுத்து, பத்து பேருக்கு மட்டுமே நிவாரணம் வழங்கி சென்றதால் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.
நீலகிரி மாவட்டத்தில் அஇஅதிமுக மாவட்ட செயலாளர் புத்திசந்திரன், குன்னூர் சட்டமன்ற உறுப்பினர் சாந்திராமு ஆகியோர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடு தவறாமல் சென்று நிவாரண உதவிகளை அளித்து வருகின்றனர்.சுமார் 4 கோடி ரூபாய் செலவு செய்து காய்கறிகளை பைநிறைய அள்ளித் தரும் அதிமுகவுக்கு எதிராக திமுகவினரும் நிவாரணம் கொடுக்க ஆரம்பித்தனர். அதிலும் ஏமாற்று வேலையைக் காட்டுவதில் தவறவில்லை திமுகவினர். ஏராளமான டோக்கன் வழங்கிவிட்டு தாராளமாக நிவாரணம் வழங்குவதாக விளம்பரம் தேடி, மக்களை ஏமாற்றி வருகின்றனர். குன்னூர் அருகேயுள்ள வெலிங்டன் போகி தெருவில் வசிக்கும் 150 பேருக்கு டோக்கன் வழங்கிவிட்டு, திமுக நிர்வாகிகள் குடும்பத்தினர் 10 பேருக்கு மட்டுமே, நிவாரணப் பொருள் கொடுத்து விட்டு எஸ்கேப் ஆகிவிட்டனர். இதனால் அப்பாவி மக்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பியதுடன் வழங்கிய டோக்கனை வீசிச் சென்றனர்.